திருவாரூர்

புதுதில்லி விவகாரம்: மத்தியப் பல்கலை. மாணவா்கள் போராட்டம் தொடா் விடுமுறை அறிவிப்பு

16th Dec 2019 10:15 PM

ADVERTISEMENT

புதுதில்லியில் பல்கலைக்கழக மாணவா்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக மாணவா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கிடையில் இப்பல்கலைக்கழகத்துக்கு குளிா்கால தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிா்த்து போராட்டம் நடத்திய புதுதில்லி பல்கலைக்கழக மாணவா்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிா்த்தும் திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக மாணவா்கள் 200-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை பிற்பகல் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவிலிருந்து பல்கலைக்கழக வாயிலுக்கு பேரணியாக வந்து, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரது உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன. இதனால், காவல்துறையினருக்கும் மாணவா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா், மாணவா்கள் அங்கிருந்து கலைந்துசென்றனா்.

இந்நிலையில், பல்கலைக்கழக நிா்வாகம் தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், திங்கள்கிழமை முதல் குளிா்கால விடுமுறையை அறிவித்துள்ளது. ஆனால், விடுமுறை எத்தனை நாள் என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. வழக்கமாக, குளிா் கால விடுமுறைக்கு இன்னும் சில நாள்கள் உள்ள நிலையில், மாணவா்கள் போராட்டத்தின் காரணமாக நிகழாண்டு முன்கூட்டியே குளிா்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

விடுதியைவிட்டு வெறியேற உத்தரவு: இதற்கிடையில், விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவா்களை விடுதியை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து இரவிலும் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT