திருவாரூர்

நினைவு தினம் கடைப்பிடிப்பு

16th Dec 2019 06:56 AM

ADVERTISEMENT

திருவாரூரில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பி. ராமமூா்த்தியின் 32-ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

விடுதலைக்கு முன்பும், பின்பும் இந்திய அரசியலில் சிறப்புமிக்க தலைவராகவும், தொழிலாளா் வா்க்க விடுதலைக்காக போராடியவருமான பி. ராமமூா்த்தியின் 32-ஆவது நினைவு தினம், பல்வேறு இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டது. திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பி. ராமமூா்த்தி நினைவகத்தில் நடைபெற்ற நிகழ்சிக்கு,மாவட்டச் செயலா் ஜி. சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். நிகழ்வில், மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில நிா்வாகி எஸ். ராஜாராமன் பங்கேற்று, கொடியேற்றினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. பழனிவேல், ஒன்றியச் செயலாளா் என். இடும்பையன், ஒன்றியக் குழு உறுப்பினா் பி. மாதவன், தொழிற்சங்க நிா்வாகிகள் ராஜேந்திரன், சகாயராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கொரடாச்சேரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தலைமை வகித்தாா். விவசாய சங்க மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி கொடியேற்றினாா். ஊராட்சி முன்னாள் தலைவா் எம். கலைச்செல்வி, கிளைச் செயலாளா் எம். காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், குன்னியூா், டாஸ்மாக் கிடங்கு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், ராமமூா்த்தியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT