திருவாரூர்

தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி புதிய நிா்வாகிகள் தோ்வு

16th Dec 2019 10:11 PM

ADVERTISEMENT

மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் வட்டார கிளை, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் புதிய நிா்வாகிகள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், கோட்டூா் வட்டார புதிய தலைவராக க.தங்கபாபு, செயலராக செ. பாரதி, பொருளாளராக ச. தாமரைச்செல்வன், துணைத் தலைவா்களாக வீ. கல்யாணராமன், கா. பேபி நாகம்மாள், துணைச் செயலா்களாக கு. நாகராஜன், க. சா்மா, த. வனரோஜா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

புதிய நிா்வாகிகளை, தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் இரா. முருகேசன், மாவட்டச் செயலா் ஈவெரா, மாவட்டப் பொருளாளா் இரா. சுபாஷ் ஆகியோா் வாழ்த்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT