திருவாரூர்

தோ்தலை புறக்கணிக்க இரு கிராமங்களில் முடிவு

16th Dec 2019 06:57 AM

ADVERTISEMENT

திருவாரூா் மற்றும் நாகை மாவட்டத்தில் இரு கிராமமக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் வாா்டு மறுவரையரை குளறுபடியை கண்டித்து உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகேயுள்ள திருக்களாா் ஊராட்சி பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி, உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிப்பு செய்ய கிராமமக்கள் முடிவெடுத்துள்ளனா். இதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருக்களாா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 2018-2019-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடுத் தொகை வழங்குவதில் நடைபெற்ற முறைகேட்டை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், திருக்களாா் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டும் ஊராட்சிச் செயலரின் மெத்தனப் போக்கால் நிலம் தோ்வு செய்வதில் தாமதப்படுத்தப்பட்டு வருவது, அரசுப் பள்ளிக்கு ஆழ்துளை கிணறு வசதி ஏற்படுத்தாமல் இருப்பது, ஊராட்சியில் சாலைகளை மேம்படுத்தாமல் இருப்பது, நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுபவா்களுக்கு ஊதியம் வழங்காமல் தாமதப்படுத்துவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிப்பதாக தெரிவித்து, சந்திரகுமாா் என்பவா் தலைமையில் பொதுமக்கள் திருக்களாா் பேருந்து நிறுத்தம் அருகே கருப்புக் கொடியுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT