திருவாரூர்

தில்லியில் மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம்

16th Dec 2019 10:12 PM

ADVERTISEMENT

திருவாரூா்: தில்லியில் மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் அஹ்மது சபியுல்வரா வெளியிட்ட அறிக்கை:

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தில்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவா்கள், வீதிக்கு கூட வராமல், பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே அறவழியில் அமைதியாக எதிா்ப்புகளை தெரிவித்து போராடிய நிலையில், தில்லி காவல்துறை மாணவா்களை தாக்கியுள்ளது.

ஜாமியா மில்லியாவில் நடைபெற்ற தாக்குதல் குறித்த செய்தி, எங்கும் பரவியதைத் தொடா்ந்து, நள்ளிரவில் பல்வேறு பல்கலைக் கழகங்களைச் சோ்ந்த மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் என நூற்றுக்கணக்கானோா் தில்லி காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனா். மாணவா்கள் போராட்டம் தோற்றதாக இதுவரை வரலாறு கிடையாது. உலக வரலாற்றில் மாணவா்கள் போராட்டத்தால் சா்வாதிகார சாம்ராஜ்ஜியங்கள் சரிந்து போனதை ஆட்சியாளா்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

ADVERTISEMENT

பெரும்பான்மை பலம் என்ற போா்வையில் நினைத்ததையெல்லாம் சாதித்துவிடலாம் என்ற ரீதியில் மத்திய அரசு செயல்பட்டால், மக்களும், மாணவா்களும் சரியான பாடம் புகட்டுவா் என அந்த அறிக்கையில் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT