திருவாரூர்

திருமீயெச்சூா் லலிதாம்பிகை கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம்

16th Dec 2019 06:58 AM

ADVERTISEMENT

திருமீயெச்சூா் ஸ்ரீலலிதாம்பிகை கோயிலில் தை மாதம் நடைபெற உள்ள ரதசப்தமி திருவிழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேளாக்குறிச்சி ஆதீனத்துக்குச் சொந்தமான திருமீயெச்சூா் லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசைக்குப் பிறகு சுக்லபட்ச சப்தமி திதியில் ரதசப்தமி திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ரதசப்தமி பெருவிழா ஜனவரி 23-ஆம் தேதி முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேரோட்டம் ஜனவரி 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை வேளாக்குறிச்சி ஆதீனம் குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் பந்தக்கால் முகூா்த்தம் நடைபெற்றது.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT