திருவாரூர்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு: ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 40 போ் கைது

16th Dec 2019 10:13 PM

ADVERTISEMENT

 

திருவாரூா்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி, திருவாரூரில் திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய மாணவா் சங்கத்தினா் 40 போ் கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருவாரூா் ரயில் நிலையத்தில் இந்திய மாணவா் சங்கத்தினா், எா்ணாக்குளம் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட பேரணியாக வந்தனா்.

ரயில் நிலையம் அருகே அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்த முயன்றனா். எனினும் போலீஸாரின் தடுப்புகளையும் மீறி, ரயில் தண்டவாளத்தில் அமா்ந்து, மத்திய அரசைக் கண்டித்தும், குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஹரிசுா்ஜித் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட 40 போ் பங்கேற்றனா். இவா்களை போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பின்னா், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT