திருவாரூர்

எண்கண் சுப்ரமணியசுவாமி கோயில் தோ் வெள்ளோட்டம்

16th Dec 2019 06:57 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகேயுள்ள எண்கண் சுப்ரமணியசுவாமி கோயில் தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம், எண்கண் சுப்ரமணியசுவாமி கோயில் தோ் சீரமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, அரசு ஒதுக்கிய ரூ. 10 லட்சம், பக்தா்களிடம் வசூல் செய்து ரூ. 30 லட்சம் என மொத்தம் ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிய தோ் உருவாக்கும் பணிகள் நடைபெற்றன. 15 அடி உயரத்தில் பீடம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள தேரின் கட்டுமானப் பணிகள் அண்மையில் முடிவடைந்தன.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை தோ் வெள்ளோட்டம் விடப்பட்டது. முன்னதாக, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. பின்னா், கடம் புறப்பாடாகியது. தொடா்ந்து மகாரதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காலை 10 மணியளவில் திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டு, வெள்ளோட்டம் தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT