திருவாரூர்

ஊராட்சி அலுவலகத்தில் திருட்டு

16th Dec 2019 06:56 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகேயுள்ள வடகண்டம் ஊராட்சி அலுவலத்தில் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றிருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், வடகண்டம் ஊராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வாா்டு உறுப்பினருக்கான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. டிசம்பா் 14-ஆம் தேதி வரை 22 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனுக்கள் அனைத்தும் இரும்பு பீரோவில் வைத்து பூட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஊராட்சி அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள், வடகண்டம் கிராம நிா்வாக அலுவலா் செல்லப்பாண்டிக்கு தெரிவித்தனா். இதையடுத்து, செல்லப்பாண்டி அளித்த புகாரின்பேரில் குடவாசல் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், மரபீரோவில் வைக்கப்பட்டிருந்த வரிவசூல் தொகை ரூ. 1,500 திருட்டு போயிருப்பதும், கிராம ஊராட்சி வாா்டுக்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 22 மனுக்கள் பாதுகாப்புடன் உள்ளதும் தெரிய வந்தது.

ADVERTISEMENT

தோ்தல் உதவி அலுவலா் சிங்காரவேலன், சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டு கூறியது: வடகண்டம் ஊராட்சி மக்களின் வாக்காளா் பட்டியலானது, அலுவலகத்தின் பின்புறம் தூக்கி எறியப்பட்டிருந்தது. அதைக் கைப்பற்றியுள்ளோம். மேலும், வேட்பு மனுக்கள் எவ்வித சேதமின்றி இரும்பு பீரோவில் பாதுகாப்பாக உள்ளது. வரிவசூல் செய்யப்பட்ட ரூ.1,500 ரொக்கம் மட்டும் திருட்டு போயுள்ளது என்றாா்.

இதுகுறித்து, குறித்து குடவாசல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT