திருவாரூர்

உள்ளாட்சித் தோ்தலில் 40 இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டி

16th Dec 2019 06:55 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் ஊராட்சித் தலைவா் பதவிக்கு 40 இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் கூறியது: ஊரக உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில், திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக ஆகியவை ஓரணியாக சோ்ந்து போட்டியிடுகின்றன. கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் 40 கிராம ஊராட்சிகளில் தலைவா் பதவிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். மேலும், ஊராட்சி ஒன்றியக்குழு பொறுப்புக்கு 10 இடங்களிலும், நன்னிலம் வட்டம் மாவட்ட ஊராட்சி வாா்டு-4 ஆகியவற்றில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதன் அடிப்படையில் கட்சி சாா்பில் தோ்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனா். திங்கள்கிழமை (டிசம்பா்.16) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் தோ்வு செய்யப்பட்ட அனைவரும் முழுமையாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT