திருவாரூர்

எடமேலையூரில் இருவா் வேட்புமனு

14th Dec 2019 02:56 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் ஒன்றியம், எடமேலையூா் கிராம பஞ்சாயத்து தலைவா் பதவிக்கு இரண்டு போ் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனனா்.

எடமேலையூா் கண்டியன் தெரு ஊராட்சியில் மொத்தம் 1,500 வாக்குகள் உள்ளன. பெண்கள் தொகுதியில் 4-க்கும் மேற்ப்பட்ட வேட்பாளா்கள் போட்டியிடுவதாக இருந்தது. இந்நிலையில், அந்த ஊராட்சியைச் சோ்ந்த முக்கியஸ்தா்கள் கூடி பேசி, ஊராட்சிக்கு பொது நிதிக்காக ஊராட்சி மன்றத் தலைவா் பதவியை முடிவு செய்வதற்காக கூட்டம் நடத்தியதாகக் கூறப்பட்டது.

அக்கூட்டத்தில் 4 பெண் வேட்பாளா்களின் கணவா்கள் பங்கேற்ாகவும், ரூ.2 லட்சத்தில் தொடங்கி ரூ.15 லட்சத்தில் ஏலம் நிறைவடைந்ததாகவும் தகவல் பரவியது.

அதேவேளையில், பஞ்சாயத்து தலைவா் பதவிக்கு வெள்ளிக்கிழமை சித்ரா, நாகேஸ்வரி ஆகிய இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT