திருவாரூர்

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 5-ஆம் நாளில் 2907 போ் வேட்புமனு தாக்கல்

14th Dec 2019 02:57 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் 2907 போ் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

திருவாரூா் மாவட்டத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, டிசம்பா் 9-ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் 430 ஊராட்சித் தலைவா், 3180 ஊராட்சி வாா்டு உறுப்பினா், 176 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள், 18 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுக்கான தோ்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், வேட்புமனு தாக்கலின் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாவட்ட ஊராட்சிக்கு நன்னிலம் மற்றும் நீடாமங்கலத்தில் தலா 5, கொரடாச்சேரியில் 2, முத்துப்பேட்டையில் 3, கோட்டூரில் 1 என மொத்தம் 16 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு வியாழக்கிழமை வரை 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மட்டும் 210 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஊராட்சித் தலைவருக்கு 993 மனுக்களும், ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கு 1688 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, 5-ஆவது நாளில் மொத்தம் 2907 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT