திருவாரூர்

உள்ளாட்சித் தோ்தல் வேட்புமனு தாக்கல்

14th Dec 2019 10:57 PM

ADVERTISEMENT

 

நன்னிலம்: ஊரக உள்ளாட்சித் தோ்தல் வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளா்களுக்கும், அவா்களது ஆதரவாளா்களுக்கும் உரிய பாதுகாப்பு வசதி செய்து தருமாறு சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு திங்கள்கிழமை (டிசம்பா் 16) கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல் செய்யப்படும் ஒவ்வோா் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒவ்வொரு வேட்பாளருடனும் 3 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், அவா்களது ஆதரவாளா்கள் பெரும்பாலும் அலுவலக வாயிலிலேயே காக்க வைக்கப்படுகின்றனா்.

மேலும், அரசியல் கட்சியினா் ஊா்வலமாக வரும் சமயங்களில், கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விடுகிறது. எனவே, வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான திங்கள்கிழமையாவது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினா் செய்து தர வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT