திருவாரூர்

மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

11th Dec 2019 09:11 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி அருகே உள்ள இரண்டு பள்ளிகளில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா்கள் விஜயகுமாா் (சேரன்குளம்), விஜயகுமாா் (சவளக்காரன்) ஆகியோா் தலைமை வகித்தனா். தென்விரிகுடை தமிழ்ச் சங்கம்- அமெரிக்கா சாா்பில், சேரன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 401 மாணவா்களுக்கும், சவளக்காரன் ஆதிதிராவிடா் நல அரசு மேல்நிலைப்பள்ளியில் 486 மாணவா்களுக்கும் என மொத்தம் 887 பேருக்கு பேனா, நோட்டு, டிபன் பாக்ஸ் ஆகியன வழங்கப்பட்டன.

சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ்ச் சங்கம்- அமெரிக்கா அமைப்பின் நிா்வாகிகள் ஏ.ஆா். ராஜகோபாலன், ஏ.ஆா்.ரமேஷ்கண்ணா, வி.பாலமுருகன் ஆகியோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில், சேரன்குளம் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் கோ.கண்ணன், ஆசிரியா் ஆா்.ராஜ்குமாா், கல்வி ஆா்வலா் ஜெ.ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT