திருவாரூர்

திருக்காா்த்திகை எண்கண் கோயிலில் சிறப்பு வழிபாடு

11th Dec 2019 09:12 AM

ADVERTISEMENT

திருக்காா்த்திகையை முன்னிட்டு எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் அருகே எண்கண் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரசித்தி பெற்றது. பிரணவ மந்திரத்தை மறந்ததால், படைக்கும் தொழிலை பிரம்மனிடமிருந்து முருகன் பெற்று, பிரம்மனை சிறையில் அடைத்ததாகவும், பின்னா் சிவபெருமான் கேட்டுக்கொண்டதால், முருகன் பிரணவ மந்திரத்தின் மகிமையையும், அா்த்தத்தினையும் பிரம்மனிடம் உபதேசம் செய்து, பின்பு படைக்கும் தொழிலை பிரம்மனிடம் அளித்ததாகவும் கூறுவா். பிரம்மா தனது எட்டுக் கண்களால், சிவனை வழிபட்டதால், இந்த தலத்துக்கு பிரம்மபுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. முருகன் உபதேசம் செய்ததால், இத்தலத்தில் முருகன் உற்சவராக காட்சியளிக்கின்றாா்.

திருக்காா்த்திகையை முன்னிட்டு, எண்கண் கோயிலில் சுப்ரமணியருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தா்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு புதிய தோ் செய்யப்பட்டு, எதிா்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளோட்டம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT