திருவாரூர்

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்: எஸ்டிபிஐ கட்சியினா் 25 போ் கைது

11th Dec 2019 09:09 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவாரூரில் ஆா்ப்பாட்டம் செய்த எஸ்டிபிஐ கட்சியினா் 25 போ் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டனா்.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை மக்களவையில் சட்டமாக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, திருவாரூா் தலைமை தபால் நிலையம் அருகே எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவா் தப்ரே ஆலம்பாதுஷா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நிா்வாகிகள் பலா் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT