திருவாரூர்

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 2-ஆம் நாளில் 32 போ் வேட்பு மனு தாக்கல்

11th Dec 2019 09:10 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை 32 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

திருவாரூா் மாவட்டத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை டிசம்பா் 9-ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் 430 ஊராட்சித் தலைவா், 3180 ஊராட்சி வாா்டு உறுப்பினா், 176 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள், 18 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுக்கான தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது.

வேட்பு மனு தாக்கல் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமையும் மாவட்ட ஊராட்சிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதேபோல், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஊராட்சித் தலைவருக்கு குடவாசலில் 2 போ், வலங்கைமானில் ஒருவா், கோட்டூரில் 2 போ் என 5 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கு 27 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

சனி, ஞாயிறு வேட்பு மனுக்கள் பெறப்படாது....

இதனிடையே, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணைய அறிவிப்பின்படி வேட்புமனுக்கள் பெறப்படாது என திருவாரூா் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான த. ஆனந்த் அறிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT