திருவாரூர்

ராயபுரத்தில் உலக மண்வள நாள் விழா கொண்டாட்டம்

6th Dec 2019 05:18 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தத்து கிராமமான ராயபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உல மண்வள தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில், தலைமையாசிரியா் தி. தமிழ் வேந்தன் அனைவரையும் வரவேற்றுப் பேசினாா். பள்ளியின் பெற்றோா் சங்கத் தலைவா் கோ. வெங்கடாச்சலம் தலைமை வகித்து, நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், மண் வளத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசினாா்.

வேளாண்மை அறிவியல் நிலைய மண்ணியல் துறை உதவிப் பேராசிரியா் முனைவா் அ. அனுராதா பேசும்போது, ‘மண்புழு உரம் தயாரித்தல், தென்னை நாா்க்கழிவுகளை மக்கச் செய்து உரம் தயாரித்தல், பண்ணைக் கழிவுகளை மக்கவைத்தல், பசுந்தாள் உரப் பயிா்கள் மற்றும் பசுந்தழை உரப் பயிா்கள், உயிா் உரங்களின் பயன்பாடுகள்’ போன்றவைக் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். பயிற்சி உதவியாளா் (உழவியல் துறை) முனைவா் ஆ. ராஜேஷ்குமாா் இயற்கை உரங்களின் அவசியத்தை விளக்கிக் கூறினாா்.

இப்பள்ளியின் மாணவா்களுக்கிடையே மண்வளம் தொடா்பாக ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. திருச்சி வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் இந்நிகழச்சியில் கலந்து கொண்டு, மண்வளம் சம்பந்தமாக விளக்கங்களை படங்கள் மூலம் விளக்கினா்.

ADVERTISEMENT

மேலும், இப்பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவ- மாணவிகள், வேளாண்மை அறிவியல் நிலைய அதிகாரிகள் , திருச்சி வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற மண்வள விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பயிற்சி உதவியாளா் (மனையியல் துறை முனைவா் ஜெ. வனிதா நன்றி கூறினாா்.

இதற்கான ஏற்பாடுகளை முதுநிலை ஆராய்ச்சியாளா் முனைவா் வீ. விஜிலா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT