திருவாரூர்

மூச்சுத் திணறல்: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

28th Aug 2019 07:12 AM

ADVERTISEMENT

திருவாரூர் அருகே மூச்சுத் திணறல் காரணமாக மாற்றுத்திறனாளி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
திருவாரூர் விஜயபுரம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் மனைவி மாலா (35). இவர் சஞ்சய் (19) என்பவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இரண்டு கால்களும் ஊனமான சஞ்சய்க்கு, மூளை வளர்ச்சியும் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை சஞ்சய்க்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாம். இதையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்தார். திருவாரூர் நகர போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT