பழையாறு மற்றும் நன்னிலம் ஒன்றியத்தில் மணல் கொள்ளை நடப்பதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரளம் கடைத்தெருவில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டியன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி. நாகராஜன், நாகை சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் வி.மாரிமுத்து, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் தியாகு.ரஜினிகாந்த், மாவட்ட செயற்குழு பி.கந்தசாமி, ஆர்.கலைமனி, எம்.சேகர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான வி. மாரிமுத்து பேசுகையில், மணல் கொள்ளையை அரசு தடுக்காவிட்டால், அனைத்து தரப்பு மக்களையும், ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.