திருவாரூர்

நாளை நீர் மேலாண்மை விழிப்புணர்வு பெருவிழா

28th Aug 2019 07:09 AM

ADVERTISEMENT

நீடாமங்கலத்தில் நீர் மேலாண்மை விழிப்புணர்வுப் பெருவிழா வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெறுகிறது.
இதுகுறித்து வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மு. ராமசுப்பிரமணியன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:  நீர் மேலாண்மை விழிப்புணர்வு பெருவிழாவ நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஆகஸ்ட் 29-இல் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர்  த. ஆனந்த் தலைமை வகிக்கிறார். தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் முன்னிலை வகிக்கிறார்.  மன்னார்குடி சட்டப் பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா வாழ்த்துரை வழங்குகிறார். இதில், பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் நேரிலோ அல்லது 04367-260666, 04367-261444 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT