மன்னார்குடி மின் கோட்டத்துக்குள்பட்ட பகுதிக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) மன்னார்குடியில் நடைபெறுகிறது என மன்னார்குடி மின்வாரிய அலுவலக செயற்பொறியாளர் கி. ராதிகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மன்னார்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சீ. கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், மன்னார்குடி மின் கோட்டத்துக்குள்பட்ட மன்னார்குடி, வடுவூர், உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, நீடாமங்கலம், கூத்தாநல்லூர், கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர் கலந்துகொண்டு தங்களது பகுதியில் உள்ள மின்சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.