திருவாரூர்

நன்னிலம் பகுதியில் ஆகஸ்ட் 27 மின்தடை

27th Aug 2019 07:53 AM

ADVERTISEMENT

நன்னிலம் மற்றும் நீலக்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, நன்னிலம் மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நன்னிலம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால், இத்துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான நன்னிலம், நல்லமாங்குடி, சன்னாநல்லூர், ஏனங்குடி, ஆண்டிப்பந்தல், குவளைக்கால், கங்களாஞ்சேரி, மாப்பிள்ளைக்குப்பம், ஆனைக்குப்பம், மூங்கில்குடி, தட்டாத்திமூலை, கீழ்குடி, சலிப்பேரி, நாடாகுடி, வீதிவிடங்கன், பூங்குளம், நெய்க்குப்பை, புளிச்சகாடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. 
நீலக்குடி பகுதியில்: இதேபோல், நீலக்குடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வண்டாம்பாளை, சேந்தமங்கலம், நீலக்குடி, திருப்பயத்தங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT