திருவாரூர்

தலைமையாசிரியர் வீட்டில் பணம், நகை திருட்டு

27th Aug 2019 07:50 AM

ADVERTISEMENT

மன்னார்குடி அருகே, திங்கள்கிழமை அரசுப் பள்ளி பெண் தலைமையாசிரியரின் வீட்டில் மர்ம நபர்கள் நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. 
மன்னார்குடி அருகேயுள்ள வடுவூர் தென்பாதியை சேர்ந்தவர்பன்னீர்செல்வம் மனைவி ஜெயா (50). இவர், வடுவூர் வடபாதி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றவர் மாலை வீட்டுக்கு வந்து, திறந்து பார்த்தபோது பின்பக்கத் கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன், பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, வடுவூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT