திருவாரூர்

ஜேசிஐ பயிற்சி வாரம் நிறைவு

27th Aug 2019 07:48 AM

ADVERTISEMENT

மன்னார்குடியில் செயல்பட்டு வரும் ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பில் பள்ளிகளில் நடைபெற்று வந்த ஜேசிஐ பயிற்சி வாரம், சனிக்கிழமை நிறைவடைந்தது.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், ஜேசிஐ மன்னை கிளைத் தலைவர் எம்.வி. வேதா முத்துச்செல்வம் தலைமை வகித்தார். மன்னார்குடி புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் வேலை, வாழ்க்கை, இருப்பு, மதிப்புகள் மற்றும் நெறிமுறைகள் எனும் தலைப்பிலும், மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் தன்னை அறிதல் எனும் தலைப்பிலும், மகாதேவப்பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழக்க வழக்கங்கள் மற்றும் எலிக்கெட் எனும் தலைப்பிலும், சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கு நிர்ணயம் எனும் தலைப்பிலும், மூவாநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நினைவக நுட்பம் எனும்  தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. 
இதில், பயிற்சியாளர்கள் டி.என். செல்லமுருகன், வி. வினோத், எம். முகம்மது பைசல், எம்.சி.பிரகாஷ், ஆர். ராஜன், எஸ். பரணிதரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
ஜேசிஐ முன்னாள் மண்டலத் தலைவர் வி.எஸ். கோவிந்தராஜன், மன்னை கிளை முன்னாள் தலைவர்கள் எஸ். கமலப்பன்,ஜி. செல்வகுமார், எஸ். ராஜகோபாலன், வி. ராஜேஷ், கிளைச் செயலர் கே. வினோத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT