மன்னார்குடியில் ஜேசிஐ மன்னை அமைப்பு சார்பில் தேசிய திறனறிதல் தேர்வு அண்மையில் நடைபெற்றது.
ஜேசிஐ இந்தியா சார்பில், பொதுத் தேர்வெழுதும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் தேசிய திறனறிதல் தேர்வு நடத்தப்படுகிறது. பொது அறிவு, அடிப்படை அறிவியல் ஆகியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு, இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மண்டல மாநாட்டில் சான்றிதழும், கோப்பையும் வழங்கப்படும்.
நிகழாண்டுக்கானத் தேர்வு, மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி, புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, எஸ்.பி.ஏ.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 490 மாணவர்கள் பங்கேற்றனர்.
இத்தேர்வுக்கு, ஜேசிஐ மன்னைத் தலைவர் எம்.வி. வேதா முத்தமிழ்செல்வம் தலைமை வகித்தார். பயிற்சியாளர்கள் எஸ். அன்பரசு, எஸ். கமலப்பன், எஸ். ராஜகோபாலன், வி. ராஜேஷ் ஆகியோர் தேர்வாளர்களாகச் செயல்பட்டனர்.
தேசியப் பள்ளி தலைமையாசிரியர் டி.எல். ராதாகிருஷ்ணன், அமைப்பின் செயலர் வி. வினோத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.