திருவாரூர்

நாளை கலை இலக்கியப் பயிலரங்கம்

16th Aug 2019 07:28 AM

ADVERTISEMENT

மன்னார்குடியில் சனிக்கிழமை (ஆக.17) முதல் இரண்டு நாள்களுக்கு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில், தஞ்சை மண்டல கலை இலக்கியப் பயிலரங்கம் நடைபெறுகிறது.
 மன்னார்குடி மேல இரண்டாம் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலையில் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவு பெறுகிறது.
 இந்நிகழ்ச்சியை கலை இலக்கியப் பெருமன்ற மாநில பொதுச் செயலர் இரா. காமராசு தொடங்கி வைக்கிறார். சனிக்கிழமை அமர்வில் பெருமன்றம் வரலாறும் சவால்களும் என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.கே. கங்கா, இந்து-இந்தி-இந்தியன் என்ற தலைப்பில் பேராசிரியர் பா. மதிவாணன், கண்ணீர்த்தீ பற்றியெரியும் கவிதை என்ற தலைப்பில் கே. கலியமூர்த்தி, துவாரகா சாமிநாதன் ஆகியோரும் பேசுகின்றனர்.  ஞாயிற்றுக்கிழமை அமர்வில், தேசியக் கல்விக் கொள்கை சமூக நீதியின் மரண சாசனம் என்ற தலைப்பில் பேராசிரியர் இரா. முரளி, கறுப்பு-நீலம்-சிவப்பு என்ற தலைப்பில் பேராசிரியர் ந. முத்துமோகன், கதை என்பது கதையல்ல என்ற தலைப்பில் எழுத்தாளர் நாணற்காடன், பேராசிரியர் பொ. திராவிடமணி ஆகியோர் பேசுகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT