திருவாரூர்

கும்பலால் தாக்கப்பட்டவர் சாவு

16th Aug 2019 07:27 AM

ADVERTISEMENT

திருவாரூர் அருகே அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்ட இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
திருவாரூர் அருகே அகரதிருநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(29). இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்தன எனவும் தற்போது வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லையெனவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் புதன்கிழமை, தனது வீட்டு வாசலில் நின்றிருந்த முத்துகிருஷ்ணனை,  ஒரு கும்பல் சுற்றி வளைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரை, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, திருவாரூர் தாலுகா போலீஸார்  விசாரணை  நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT