திருவாரூர்

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

11th Aug 2019 01:34 AM

ADVERTISEMENT

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற, 2018-2019-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்று தற்போது முதலாமாண்டு தொழிற்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2018-2019-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று தற்போது முதலாம் ஆண்டு தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியுள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களின் வாரிசுதாரர்கள்
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கம் மற்றும் விவரக்குறிப்பின்படி, இணையம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 15.
2019-2020-ஆம் கல்வி ஆண்டிற்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டு, தற்போது பெண் சிறார்களுக்கு மாதம் ரூ.3000 (ஆண்டுக்கு ரூ.36000), ஆண் சிறார்களுக்கு மாதம் ரூ.2500 (ஆண்டுக்கு ரூ.30000) என வழங்கப்படுகிறது. இதன்படி, இணையவழியில் விண்ணப்பிப்பதற்கு முன்னர், இதற்கான முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரின் படைப்பணி தகுதிச்சான்று பெற, முன்னாள் படைவீரரின் அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் சிறாரின் கல்விச்சான்றுடன் திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அலுவலக வேலை நாள்களில் நேரில் அணுகலாம். 
இதன்படி, திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியுடைய முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இந்த பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை பெற இணையவழி விண்ணப்பம் செய்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT