திருவாரூர்

நீதிமன்ற வளாகத்தில் தொடுதிரை கணினி வசதி

11th Aug 2019 01:36 AM

ADVERTISEMENT


நன்னிலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொடுதிரை கணினி வசதி வெள்ளிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி ஆர். கலைமதி தலைமை வகித்து, தொடுதிரை கணினி சேவையைத் தொடங்கி வைத்து பேசியது:
நீதிமன்ற வழக்கு நடைமுறைகள் அனைத்தும் பொதுமக்கள் அறியும் வண்ணம் வெளிப்படைத் தன்மை கொண்டவை. மேலும் நன்னிலம் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தொடுதிரை கணினி மூலம் தங்களது வழக்கு பற்றி வழக்குரைஞர்களும், மனுதாரர்களும் வழக்கு எண்ணை  குறிப்பிட்டு, அதன் முழு விவரத்தையும் அறியலாம் என்றார். மேலும் இவ்வாறு படிப்படியாக அனைத்து நீதிமன்றங்களிலும் இந்த தொடுதிரை கனினி வசதி செய்ய அரசு முயற்சி செய்து வருகிறது. ஏனென்றால் சட்ட நடைமுறைகளும்,  நீதிமன்ற வழக்கு நடைமுறைகளும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற அரசு மற்றும் நீதிமன்ற எண்ணத்திற்கு ஏற்ப செயல்படுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் சிரமப்படாமல் தங்களது பணிகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், நன்னிலம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் டி. ராதாகிருஷ்ணன், செயலாளர் கே. தெய்வீகன், நன்னிலம் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெகதீசன் மற்றும் வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.  மாவட்ட இணை நீதிபதி எஸ். பக்கிரிசாமி வரவேற்றார். திருவாரூர் மூத்த நீதித்துறை நடுவர் ஜி. விஜயகுமார் நன்றி தெரிவித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT