திருவாரூர்

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

11th Aug 2019 01:33 AM

ADVERTISEMENT


திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  குடவாசல் பகுதியைச் சேர்ந்த பவிதா என்பவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார். மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததே காரணம் என்று கூறி முறையிடப்பட்டது. இதைத்தொடர்ந்து செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் என 5 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில், திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தொகுதி பொறுப்பாளர் வினோத்ராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மஜக...
ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, பொதக்குடியில் மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பொதக்குடி அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் பி.எம்.ஏ. சீனி ஜெஹபர் சாதிக் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜீதீன், மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் அய்யம்பேட்டை காதர் பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்காக மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கூத்தாநல்லூர் போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்...
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கைது ஆகிய விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து, பேரளம்  கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டக்குழு உறுப்பினர் தியாகு ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், தலைவர் பாலா, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சீனி. ராஜேந்திரன்,  வரத. வசந்தராஜன், எம். ராமமூர்த்தி, ஸ்டாலின், ஆர். சுந்தரமூர்த்தி டி.பி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT