ரஹமத் பெண்கள் மெட்ரிக் பள்ளி: 16-ஆவது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ரஹமத் பெண்கள் மெட்ரிக் பள்ளி 16-ஆவது ஆண்டாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ரஹமத் பெண்கள் மெட்ரிக் பள்ளி 16-ஆவது ஆண்டாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 107 மாணவிகளும் தேர்ச்சிப் பெற்று 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளனர். இதில், 11 மாணவிகள் 450 மதிப்பெண்களுக்கு மேலும்,, 35 மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கு மேலும், 37 மாணவிகள் 350 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர். பள்ளி அளவில் மாணவி ஆசிலா 485, துர்கா 479, அபினயா 472 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். தொடர்ந்து, 100 சதவீத தேர்ச்சிக்கு காரணமான பள்ளி முதல்வர் வி. சரஸ்வதி, பள்ளி துணை முதல்வர் ஆனந்தி உள்ளிட்ட அனைத்து ஆசிரியைகளையும் பள்ளித் தாளாளர் எம்.ஏ. முஸ்தபா, இணைத் தாளாளர் முகம்மதுயாசின் உள்ளிட்டோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com