பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற பள்ளிகள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள பள்ளிகள் சிறப்பிடம் பெற்றுள்ளன. 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள பள்ளிகள் சிறப்பிடம் பெற்றுள்ளன. 
கூத்தாநல்லூர் அருகேயுள்ள அதங்குடி, வாழாச்சேரி மதர் இந்தியா உயர்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 60 மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றனர். இவர்களில், ஜெ. ரிக்பாயா பாத்திமா 481, ச. நிவேதா 479, க. சபரிஜெயஸ்ரீ 478 மதிப்பெண்கள் பெற்றனர்.  மேலும், 4 பேர் 470  மதிப்பெண்களுக்கு மேலும், 7 பேர் 450 மதிப்பெண்ணுக்கு மேலும், 21 பேர் 400 மதிப்பெண்ணுக்கு மேலும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சிப் பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் வி.ஆர்.என். பன்னீர்செல்வம், தலைமையாசிரியர்எம். சுப்ரமணியன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். 
ஆக்ஸ்போர்டு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 95 பேரில் 93 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சிப் பெற்றவர்களை பள்ளித் தாளாளர் டாக்டர் ஜெ.பீ. அஷ்ரப் அலி, பள்ளி முதல்வர் ஏ. தியாகராஜன், கல்வி ஆலோசகர் எம். அப்துல் வஹாப், பள்ளி துணை முதல்வர் ஜி. மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இதேபோல், மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளியில் 183 பேர் தேர்வு எழுதியவர்களில்,173 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில், பி. விஜய் சுவாமிநாதன், எம். இசட்.அப்துல் அஜீஸ், ஆர். இப்ராஹிம் ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர். தேர்ச்சி பெற்ற அனைவரையும் பள்ளி கல்விக் குழுத் தலைவர் எல்.எம்.முகமது அஷ்ரப்,செயலாளர் வி.ஏ.எம்.ஜேகபர்தீன், தாளாளர் டி.எம். தமீஜ்ஜூதீன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.எம். அன்வர்தீன், தலைமையாசிரியர் டி. உதயகுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இதேபோல், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 219 மாணவிகளில், 199 மாணவிகள்  தேர்ச்சி பெற்றனர். தலைமையாசிரியர் பீ. சுதா, உதவித் தலைமையாசிரியர் ஜி. வேலாயுதம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். அகரப்பொதக்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 50 மாணவர்களில் 45 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களை தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com