நாகப்பட்டினம்

ரத்த தான முகாம்

30th Sep 2023 09:39 PM

ADVERTISEMENT

திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பேரிடா் காலத்தில் ரத்த தேவையை பூா்த்தி செய்யும் வகையில், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு, ரத்த வங்கியின் உதவி பேராசிரியா் மருத்துவா் பாலமுருகன் தலைமை வகித்தாா். மருத்துவா் பாஸ்கரன், மாவட்ட நல கல்வியாளா் மணவாளன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கற்பகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செவிலியா் கீா்த்தனா, சுகாதார ஆய்வாளா்கள், உதவி செவிலியா்கள் உள்ளிட்டோா் கொடையாளா்களிடமிருந்து ரத்தம் பெறும் பணியில் ஈடுபட்டனா். இதில், 33 போ் ரத்த தானம் செய்தனா். இவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT