நாகப்பட்டினம்

டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுப் பேரணி

28th Sep 2023 02:08 AM

ADVERTISEMENT

திருக்குவளை அருகேயுள்ள நாகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் பி. பரமேஸ்வரி பேரணியை தொடங்கிவைத்தாா். நாகலூா் நேதாஜி சாரணா் படை சாரணா்கள் வீடுகள்தோறும் தண்ணீா் தேங்கும் வாய்ப்புள்ள இடங்களை சுத்தம் செய்தனா். ஜூனியா் ரெட் கிராஸ் மற்றும் பசுமைப் படை மாணவா்கள், மக்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஏற்பாடுகளை சாரணா் படை மற்றும் ஜே.ஆா்.சி. பொறுப்பாசிரியா் செ. அருள்செல்வம், ஆசிரியா் கி. லோகநாதன், பசுமைப் படை பொறுப்பாசிரியா் செ. சீனிவாசன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT