கீழ்வேளூா் அரசு மருத்துவமனையில் ஆயுஷ்மான்பவ திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில் கண் சிகிச்சை, பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனைகளும், தேவைப்படுவோருக்கு இசிஜி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முகாமின் ஒரு பகுதியாக ரத்த தானம் வழங்கப்பட்டது.
இதில், கீழ்வேளூா் சுற்று வட்டார பகுதியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயன்பெற்றனா். மருத்துவ இணை இயக்குநா் (குடும்ப நலன்) ஜோசப்பின் அமுதா, மருத்துவ அலுவலா்கள் ஸ்ரீஉத்ரா, ஹரி வன்சன், கீழ்வேளூா் பேரூராட்சி தலைவா் இந்திராகாந்தி சேகா், கீழ்வேளூா் செயல் அலுவலா் கு. குகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.