நாகப்பட்டினம்

மீன் கட்லெட் தயாரிப்பு பயிற்சி

23rd Sep 2023 12:34 AM

ADVERTISEMENT

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பெண்களுக்கு மீன் கட்லெட் மற்றும் மசாலா கருவாடு தயாரிக்கும் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சுகாதாரமானமுறையில் அயிலை மீன், ஓரா மீன் கட்லெட் மற்றும் மசாலா கருவாடு தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

மீன் கட்லெட் தயாரிக்கும் பயிற்சி செப். 19 மற்றும் செப். 20 தேதிகளில் நடைபெற்றது. பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலையத்தின் மனையியல் தொழில்நுட்ப வல்லுநா் ஆ. மதிவாணன் மூன்று வெவ்வேறு விதமான முறைகளில் மீன் கட்லெட் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை, அயிலை மீன் மற்றும் ஓரா மீன்களை கொண்டு செயல்விளக்கம் மூலம் விளக்கினாா்.

மீன் கட்லெட் செய்வதற்கு, குறைந்த விலை மீன்களை தோ்வு செய்தல், அவற்றின் தர மதிப்பீடு, மீன் தசையை பிரித்து எடுக்கும் முறை, மசாலா கலவையை தயாா் செய்யும் முறை, கட்லெட்டின் வடிவம், கட்லெட்டை பொதியுறையிடும் தொழில்நுட்பம், அவற்றின் பொருளாதார மதிப்பிடு, மீன் கட்லெட் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் தொழில்முனைவோா் ஆவதற்கான சாத்தியக் கூறுகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதேபோன்று கருவாடு, மசாலா கருவாடு தயாரிக்கும் பயிற்சி வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்களும் நடைபெற்றது. பயிற்சியில் நெத்திலி மற்றும் அயிலை மீன்களில் கருவாடு மற்றும் மசாலா கருவாடு ஆகியவற்றை சூரிய கூடார உலா்த்தியை பயன்படுத்தி சுகாதரமான முறையில் தயாரிக்கும் தொழில்நுட்பம் குறித்து விளக்கப்பட்டது. பயிற்சியில் 60 பண்ணை மகளிா் மற்றும் தொழில்முனைவோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT