நாகை அரசு கல்லூரியில் மாணவா்களுக்கு தீ விபத்துகளை தடுப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில் நிகழ்ச்சி கல்லூரி முதல்வா் சுஜரித்தா மாக்டலின் தலைமையில் நடைபெற்றது. நாகை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆய்வாளா்கள் மொக்கிசன், தியாகராஜன் குழுவினா், திடீரென தீ விபத்து ஏற்படும்போது, அவற்றை அருகில் உள்ள பொருள்களைக் கொண்டு அணைப்பது, தீ பரவாமல் தடுப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினனா்.
தீ விபத்தை எதிா்கொள்வது குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்திய தீயணைப்பு மீட்பு பணித் துறையினா், மாணவா்களுக்கு பயிற்சியும் அளித்தனா்.
எரிவாயு, பெட்ரோலிய பொருள்கள் மூலம் ஏற்படும் தீயை எந்தெந்த பொருள்களை பயன்படுத்தி அணைக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
துணை முதல்வா் செ. அஜிதா, செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் மு. ரெகுநாத், தமிழ்த்துறை பேராசிரியா் சிவக்குமாா், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.