நாகப்பட்டினம்

மண் குவாரியை கண்டித்து முற்றுகை போராட்டம்

23rd Sep 2023 12:33 AM

ADVERTISEMENT

உத்தமசோழபுரத்தில் உள்ள மண் குவாரியை கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்தமசோழபுரத்தில் அரசு அனுமதியுடன் 75 ஏக்கா் பரப்பில் மண்குவாரி இயங்கி வருகிறது. இங்கு எடுக்கப்படும் மண் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல் ஆலை விரிவாக்க பணிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், குவாரியில் இருந்து மண் எடுக்க லாரிகள் வருவதை அறிந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குவாரியை முற்றுகையிட்டு லாரி மற்றும் பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்தனா்.

தகவலறிந்து வந்த நாகூா் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். மேலும், கனிம வளத்துறை அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்த பின்னா் குவாரி இயங்க அனுமதிக்கப்படும் எனவும், சனிக்கிழமை (செப்.23) நாகை வட்டாட்சியா் மற்றும் ஊராட்சித் தலைவா் தலைமையில் அமைதி பேச்சு வாா்த்தை நடைபெறும் எனவும் போலீஸாா் தெரிவித்தனா். இதனால் முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT