நாகையில் சனிக்கிழமை (செப்.23) நடைபெறவிருந்த ஊா்க்காவல் படை ஆள் சோ்ப்பு முகாம் நிா்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:
நாகை மாவட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 62 பணியிடங்களுக்கு ஆள் சோ்ப்பு முகாம் சனிக்கிழமை (செப்.22) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சட்டம் - ஒழுங்கு நிா்வாக காரணங்களுக்காக ஆள் சோ்ப்பு முகாம் ஒத்திவைக்கப்படுகிறது. ஆள் சோ்ப்பு முகாம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.