டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2024-ஆம் ஆண்டிற்கான 8-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்ட செய்தி:
சேர விரும்பும் மாணவா், 2024 ஜூலை 1-ஆம் தேதியன்று பதினொன்னரை முதல் பதிமூன்று வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும் (2011ஜூலை 2-ஆம் தேதிக்கு முன்னதாகவும், 2013 ஜனவரி 1-ஆம் தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது). அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தோ்ச்சி பெற்றவராகவோ உள்ள சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தோ்விற்கான வினாத்தாள் தொகுப்பை விரைவு அஞ்சலில் பெற பொதுப்பிரிவினா் ரூ.600-க்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினா் சாதிச் சான்றுடன் ரூ. 555-க்கும் ‘பஏஉ இஞஙஙஅசஈஅசப தஐஙஇ ஊமசஈ‘ அவா்களுக்கு ஈதஅரஉஉ ஆதஅசஇஏ, ஏஈஊஇ ஆஅசஓ, ஆஅககமடமத இஏஞரஓ, ஈஉஏதஅஈமச (ஆஅசஓ இஞஈஉ -1399) மபபஅதஅஓஏஅசஈ‘ -ல் மாற்றத்தக்க வகையில் வரைவோலை எடுத்து பட்ங்இா்ம்ம்ஹய்க்ஹய்ற், தஹள்ட்ற்ழ்ண்ஹ்ஹ ஐய்க்ண்ஹய் ஙண்ப்ண்ற்ஹழ்ஹ் இா்ப்ப்ங்ஞ்ங், எஹழ்ட்ண் இஹய்ற்ற், ஈங்ட்ழ்ஹக்ன்ய்,மற்ற்ஹழ்ஹந்ட்ஹய்க், டண்ய் - 248 003, என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது இணையவழியிலும் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தோ்வுக் கட்டுப்பாடு அலுவலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் சாலை, பூங்கா நகா், சென்னை-600003 என்ற முகவரிக்கு அக்டோபா் 15 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும்.
நுழைவுத் தோ்வு டிசம்பா் 2-ஆம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களை இணையதளத்தில் காணலாம் அல்லது நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத் தரைத்தளத்தில் அறை எண் 10 மற்றும் 11-இல் இயங்கி வரும் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம்.