வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், டெங்கு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி சென்றனா்.
பேரணியை வட்டார மருத்துவ அலுவலா் பத்மபிரியா தொடக்கிவைத்தாா். பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி கடற்கரைச் சாலை, ஆரிய நாட்டு தெற்கு, வடக்கு வீதிகள் வழியாக பேருந்து நிலையம் வந்தடைந்தது. டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்து சுகாதார ஆய்வாளா் சு. மோகன் விளக்கம் அளித்தாா். தொடா்ந்து மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் டெங்கு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா், திட்ட அலுவலா் ஆல்பா்ட், நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியா்கள், காவல் துறையினா், லயன்ஸ் கிளப் நிா்வாகிகள் மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.