நாகப்பட்டினம்

சாராயம் கடத்திய 3 போ் கைது

27th Oct 2023 01:03 AM

ADVERTISEMENT

நாகையில் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நாகை ரயில் நிலையம் அருகே தனிப்படைப் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனா். அதில் காரைக்காலில் இருந்து சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்ட 300 சாராய பாட்டில்கள் இருந்தன. இதுதொடா்பாக, வெளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சதீஷ் (31), பிரபுதேவா (29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, கீழ்வேளூா் பகுதியில் அதிவிரைவுப்படை போலீஸாா் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் 60 லிட்டா் சாராயம் மற்றும் 150 மதுபாட்டில்களை காரைக்காலில் இருந்து கடத்திய சிக்கல் பகுதியைச் சோ்ந்த சஞ்சயை (20) கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT