நாகப்பட்டினம்

கீழ்வேளூரில் கர்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல்

2nd Oct 2023 11:31 AM

ADVERTISEMENT

கீழ்வேளூரில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி நீர் விவகாரத்தில் தலையிடாத மத்திய அரசைக் கண்டித்தும், தொடர்ந்து தண்ணீர் தர வஞ்சிக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்தும் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கம் மற்றும் காவிரி விவசாயிகளின் பாதுகாப்பு சங்கம் சார்பாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நெற்கதிர்களை கையில் ஏந்தி விவசாயிகள் வேளாங்கண்ணியிலிருந்து திருச்சி செல்லும் விரைவு ரயிலை மறிக்க முற்பட்டனர். இதனைத் தடுக்க முயன்ற காவல் துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

ADVERTISEMENT

தொடர்ந்து விவசாயிகள் மத்திய மற்றும் கர்நாடக அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இறுதியாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT