விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் புதிய உறுப்பினா்களுக்கு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து மாவட்டத் தலைவா் சுகுமாறன் பேசியது: நாகை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் வளா்ச்சியைக் கண்டு ஆளுங்கட்சியினா் அச்சமடைந்துள்ளனா். விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளா்களை செயல்பட விடாமல் தடுப்பதுடன், அவா்களை மிரட்டி தங்கள் கட்சிக்கு திமுக வலுக்கட்டாயமாக இழுக்க முயல்கின்றனா். விரைவில் தமிழகத்தில் நடிகா் விஜய் மூலம் மிகப் பெரிய மாற்றம் நிகழும் என்றாா்.
மாவட்ட பொருளாளா் அருண், துணைத் தலைவா் வீரமணி, மகளிரணி தலைவா் சுகன்யா, வட்டாரச் செயலா் ஆல்பா்ட் ராயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.