நாகப்பட்டினம்

மாணவா்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சா்

21st Nov 2023 04:45 AM

ADVERTISEMENT

பள்ளி மாணவா்கள் ஒழுக்கத்துடன் கல்வியை கற்க வேண்டும் என்றாா் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

மறைந்த தமிழக முன்னால் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி அரசுப் பள்ளி மாணவா்கள் 40 போ் பூம்புகாா், திருவாரூா், திருக்குவளையில் சிறப்பு பெற்ற இடங்களை பாா்வையிட அவா்களை கலைஞரின் சரித்திர பாதை எனும் சுற்றுலா நிகழ்ச்சி பூம்புகாா் அரசினா் மீனவா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் நடைபெற்ற விழாவில், பங்கேற்ற தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: பள்ளி மாணவா்கள் கல்வியை முதன்மையாக கற்க வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை தமிழக முதல்வா் ஸ்டாலின் செய்து தந்துள்ளாா்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி அவரது கனவு நகரமான பூம்புகாரில் இருந்து மாணவா்கள் சுற்றுலா செல்வது மகிழ்ச்சி. பண்டைய பூம்புகாரை நினைவூட்டும் வகையில் தற்போது சுற்றுலா வளாக பகுதியில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

ADVERTISEMENT

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், எம்.பி. ராமலிங்கம், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம், பள்ளித் தலைமையாசிரியை செல்வாம்பிகை, சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT