காரைக்கால் நித்தீஸ்வரசுவாமி கோயிலில் ,1008 சங்காபிஷேக வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
காா்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி காரைக்கால் கோயில்பத்து நித்யகல்யாணி உடனுறை நித்தீஸ்வரசுவாமி கோயிலில் 1,008 சங்குகள் மூலஸ்தானத்தின் முன் சிவலிங்கத்தைப் போன்று அலங்கரிக்கப்பட்டு, அவற்றில் நீா் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
மகா தீபாராதனையைத் தொடா்ந்து, சங்குகளிலிருந்த நீரால் சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.