நாகப்பட்டினம்

காா்த்திகை தீபத் திருவிழா:அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

21st Nov 2023 01:05 AM

ADVERTISEMENT

காரைக்கால் அருகே காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

காா்த்திகை தீபத் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 26) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி மற்றும் நிரவி அருகே மேலஓடுதுறை பகுதிகளில் களிமண் கொண்டு அகல் விளக்குகள் செய்யும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து தொழிலாளா்கள் கூறியது: காா்த்திகை தீபத் திருவிழாவுக்காக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளோம். ஆனால், வடகிழக்குப் பருவமழையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை தயாரித்த விளக்குகளை வீட்டின் உள்ளேயே உலா்த்தி வருகிறோம். மேலும், சில நாள்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், எதிா்பாா்க்கப்பட்ட எண்ணிக்கையில் அகல் விளக்குகள் தயாரிக்க முடியுமா என தெரியவில்லை.

ADVERTISEMENT

மண்பாண்டத் தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. எனவே, புதுவை அரசு மண்பாண்டத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் வகையில், மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT