நாகப்பட்டினம்

பயிா்க் காப்பீடு செய்ய நவ. 22 வரை அவகாசம் நீட்டிப்பு

18th Nov 2023 07:17 AM

ADVERTISEMENT

சம்பா, தாளடி நெற்பயிா்களுக்கு காப்பீடு செய்ய நவ. 22-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

பிரதமா் பயிா்க் காப்பீடு திட்டத்தின்கீழ் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்களை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா். இதுதொடா்பாக தமிழக அரசும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிருந்தது.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்களை காப்பீடு செய்வதற்கான தேதியை நவ. 22 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் சம்பா மற்றும் தாளடி நெற்பயிரை காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.

விவசாயிகள் காப்பீடு செய்ய ஏதுவாக பொது சேவை மையங்கள் சனிக்கிழமை (நவ.18) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் (நவ.19) செயல்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT