நாகப்பட்டினம்

நவ.24 இல் நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

18th Nov 2023 07:18 AM

ADVERTISEMENT

நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் நவம்பா் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

நாகை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.24) நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலக மாநாட்டு கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு இக்கூட்டம் நடைபெறும். இதில் நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது குறைகள் மற்றும் கருத்துகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT